Manjummel Boys Producer : இந்த ஆண்டு மலையாள சினிமா உலகிற்கு ஒரு மகத்தான ஆண்டு என்றே கூறலாம். இன்னும் வருடம் துவங்கி 4 மதமே முடியாத நிலையில், பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து கெத்தாக நிற்கிறது மோலிவுட்.
மெகா ஹிட் மஞ்சும்மல் பாய்ஸ்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மலையாள மொழி திரைப்படங்கள் உலக அளவில் பெரிய சாதனைகளை படைத்து வருகின்றன. குறிப்பாக 100 கோடி ரூபாய் என்கின்ற பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தொடர்ச்சியாக பல மலையாள திரைப்படங்கள் படைத்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிதம்பரம் எஸ் போடுவாள் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியாகி உலக அளவில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.
கொண்டாடிய இந்திய சினிமா ரசிகர்கள்
தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்திய சினிமா ரசிகர்களையே இந்த திரைப்படம் வெகுவாக ஈர்த்தது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் குணா திரைப்பட பாடல் தான் இந்த திரைப்படத்தின் உயிர்நாடி என்றால் அது மிகையல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தனுஷ், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் பட குழுவினர் மற்றும் இயக்குனர் சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் மீது புகார்
விரைவில் இயக்குனர் சிதம்பரம் தமிழ் மொழியிலும் படங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் இந்த நேரத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி மீது பரபரப்பு புகார் ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவனான ஷாம் ஆண்டனி தனக்கு படத்தின் லாபத்தில் 40 சதவிகிதம் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புகார் மனு சொல்வதென்ன?
அந்த மனுவில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக தன்னிடம் ஏழு கோடி முதலீடு செய்ய ஷான் ஆண்டனி கூறியதாகவும். அதை நம்பி தானும் அந்த படத்திற்காக ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் கூறியிருக்கிறார் சிராஜ். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி தனக்கு லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறினார் என்றும், ஆனால் இதுவரை தனக்கு அந்த பணத்தை சொன்னபடி தரவில்லை என்றும், மேலும் தான் படத்திற்காக முதலீடு செய்த ஏழு கோடி ரூபாயையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் சிராஜ்.
நீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி மற்றும் பாபு சாஹிர் ஆகியோரின் வங்கி கடக்கை முடக்க உத்தரவிட்டது. அதன் பிறகு அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீதும் கேரளாவில் மரடு பகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.