நிறைமாத கர்ப்பிணினு கூட பார்க்காம இப்படியா டார்ச்சர் பண்றது... கணவரின் செயலால் கடுப்பான அமலாபால் - வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Apr 25, 2024, 9:12 AM IST

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பாலை அவரது கணவர் ஜெகத் தேசாய் செல்லமாக டார்ச்சர் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கேரளாவை சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் எப்பவுமே மவுசு அதிகம். அதனால் மலையாள நடிகைகள் பலர் தமிழ் படங்களில் நடிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாகவும் உருவெடுத்துள்ளனர். அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் அமலா பால். மைனா படம் மூலம் பிரபலமான இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

பின்னர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், டாப் ஹீரோயினாக இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், சில ஆண்டுகளிலேயே இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்தான 2 ஆண்டுகளில் ஏ.எல்.விஜய் மறுமணம் செய்துகொண்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Ajith - Shalini: ரோமியோ.. ஜூலியட்டாக மாறி ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் அஜித் - ஷாலினி! வைரலாகும் Cute போட்டோ!

ஆனால் அமலாபால் விவாகரத்துக்கு பின் சுமார் 6 ஆண்டுகள் சிங்கிளாகவே இருந்து வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு தனது பிறந்தநாளன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்திய அவர், அடுத்த சில தினங்களிலேயே அவரை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அழகிய போட்டோஷூட் மூலம் அறிவித்தார் நடிகை அமலா பால்.

திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய கணவருடன் ஜோடியாக எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவ்வபோது பதிவிட்டு வரும் அமலா பால், தற்போது ஒரு டார்ச்சர் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த ரீல்ஸ் வீடியோவில் அமலா பால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது கணவர் ஜெகத் தேசாய் காதருகே வந்து பாட்டுப்பாடி வெறுப்பேற்றுகிறார். இதனால் கடுப்பாகும் அமலா பால் காதைப் பொத்திக் கொண்டு கியூட்டாக ரியாக்ட் செய்கிறார். ஜெகத் தேசாயின் இந்த செல்லமான டார்ச்சர் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jagat Desai (@j_desaii)

இதையும் படியுங்கள்... பிரம்மாண்ட இயக்குனர் வீட்டு திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை- அதன் விலை இத்தனை லட்சமா

click me!