
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே கம, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி டாப் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... AR Murugadoss : நோ சொன்ன விஜய்... ஓகே சொன்ன அஜித்! படு குஷியில் முருகதாஸ் - மீண்டும் இணையும் தீனா கூட்டணி!
பழைய பட பாடல்கள் மீது அதிகளவு ஈர்ப்பு கொண்ட லோகேஷ் கனகராஜ், தான் இயக்கும் படங்களில் 80ஸ் அல்லது 90ஸ் களில் பேமஸான பாடல்களை இடம்பெறச் செய்து, அதனை மேலும் பேமஸ் ஆக்கி வருகிறார். அந்த வகையில் கைதி படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு’ எனும் எவர்கிரீன் ஹிட் பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு பிரபலமாக்கினார்.
இதையும் படியுங்கள்...varisu : ‘வாரிசு’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்
அதேபோல் அண்மையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ எனும் பழைய குத்துப்பாடலை பயன்படுத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இது வேலு பிரபாகரன் இயக்கிய அசுரன் படத்தில் இடம்பெற்ற பாடலாகும். இப்பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான், நெப்போலியன் மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார்கள்.
இதையும் படியுங்கள்... TNPL 2022 : போட்ட முதல் பாலே விக்கெட்... TNPL-ல் கலக்கும் கவுதம் மேனன் மகன் - அறிமுக போட்டியிலேயே அசத்தல்
இந்தப் பாடல் அப்போது பிரபலமானதை விட விக்ரம் படத்தில் இடம்பெற்ற பின் அதிகளவு பேமஸ் ஆனது. ஏராளமானோர் யூடியூபில் இந்த பாடலை தேடி பார்ப்பதால் இதற்கான வியூஸ்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இப்பாடலுக்கு நடனமாடிய மன்சூர் அலிகான், தற்போது மீண்டும் அதே எனர்ஜி உடன் ரீ-கிரியேட் செய்துள்ளார். 27 வருஷத்துக்கு பின்னரும் அதே எனர்ஜி உடன் அவர் நடனம் ஆடி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.