
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டு ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி. இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் டாப் 5 போட்டியாளர்களாக ஸ்ருதிகா, தர்ஷன், முத்துக்குமார், வித்யுலேகா, அம்மு அபிராமி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதனை கொண்டாடும் விதமாக இந்த வார எபிசோடில் கடந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு அசத்திய பிரபலங்கள் சிலர் கலந்துகொண்டனர். அதன்படி கடந்த சீசன் டைட்டில் வின்னர் கனி, தீபா, பவித்ரா, ஷகீலா மற்றும் ரித்திகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த வாரம் கலந்துகொண்டனர்.
அதேபோல் கோமாளிகளும் கடந்த சீசனில் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆன கெட் அப்களில் வந்து கலந்துகொண்டனர். தற்போது தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வரும் புகழும் இந்த எபிசோடில் தனுஷ் மாரி கெட் அப்பில் வந்து கோமாளியாக கலந்துகொண்டார். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகை ஷகீலா தனது தங்கை குறித்து உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது : “கோமாளிகளில் ஒருவரான ஷீத்தலை பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் தங்கை ஞாபகம் தான் வரும். என் உடன் பிறந்த தங்கை பெயரும் ஷீத்தல் தான். அவள் ‘ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி’ பாடலில் நடிகர் விஜய் கூட டான்ஸ் ஆடி இருக்கிறார். ஆனால் அவள் இப்போது இல்லை. 23 வயதிலேயே உயிரிழந்துவிட்டால்” எனக் கூறி கண்கலங்கினார் ஷகீலா.
இதையும் படியுங்கள்... Samantha : 56 வயது நடிகருடன் காதலா...! நடிகை சமந்தாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.