மணிரத்தினம் தன்னை ஏமாற்றியதாக மனம் குமுறிய எம் ஜி ஆர் மகன் இயக்குனர்...

manimegalai a   | Asianet News
Published : Nov 06, 2021, 01:57 PM ISTUpdated : Nov 06, 2021, 02:29 PM IST
மணிரத்தினம் தன்னை ஏமாற்றியதாக  மனம் குமுறிய எம் ஜி ஆர் மகன் இயக்குனர்...

சுருக்கம்

மணிரத்னம் தயாரித்த நவரசா படத்திலிருந்து தான் இயக்கிய  பாகத்தை நீக்கியது மிகுந்த மன வேதனை அளிப்பதாக இருந்தது என பொன்ராம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

கன்னட படமான பல்லவி அணு பல்லவி மூலம் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம். மோகன் நடிப்பில் வெளியான மௌனராகம், கமலின் நாயகன் படம் மூலம் மிக பிரபலமான இயக்குனரானவர். இதுவரை 27 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள மணிரத்னம் தற்போது தனது பல வருட கனவான பொன்னியின் செல்வன் படத்தி இயக்கி வருகிறார். இரண்டு பாகமாக வெளிவரவுள்ள இந்த படம்  கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைதழுவியதாகும். அமிதாப் பட்ஷன் ,ஐஸ்வர்யா ராய்,விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,த்ரிஷா,கீர்த்தி சுரேஷ் என மாபெரும் நட்சத்திர பட்டாளத்துடன்  இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே பட தயாரிப்பிலும் ஆர்வம் கொண்ட  மணிரத்னம் சமீபத்தில் , ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்களோடு ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்திருந்தார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்த படம்  ரேவதி, விஜய் சேதுபதி,சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரா,அதர்வா, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்களின்  கலவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் வரும் ஒன்பது உணர்வு சார்ந்த கதைகளையும் ஒன்பது இயக்குனர்கள் கொண்டு இயக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நவராச படத்திற்கான நகைச்சுவை படத்தை  பொன்ராம் இயக்கியுள்ளார். அந்த காட்சிகளை பார்த்த மணிரத்னம் காமெடி கதை சரியாக வரவில்லை என கூறி அந்த காட்சிகளை படத்திலிருந்து நிக்கி விட்டு மலையாள இயக்குனர்  ப்ரியதர்ஷனை  கொண்டு மீண்டும் உருவாக்கியுள்ளனர். இருந்தும் படக்குழு எதிர்பார்த்த வெற்றியை நவரசா பெற்று தரவில்லை.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க இயக்குனர் பொன்ராம் தற்போது சத்திய ராஜ், சசிகுமார் நடித்துள்ள எம் ஜிஆர் மகன் படத்தை இயக்கியுள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த படம் குறித்த விழாவில் பேசிய இயக்குனர் பொன்ராம் தனது கதையை மணிரத்னம் புறக்கணித்ததாகவும், காரணம் கேட்டதற்கு ஆடியோ சரியில்லை என கூறியது தனக்கு திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் மணிரத்னம் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக இயக்குனர் பொன்ராம் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். பிரபல இயக்குனரின் இந்த செயல் திரையுலகில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?