ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சை… குறிப்பிட்ட சமூகம் தாக்கப்பட்டுள்ளது? சிக்கலில் டைரக்டர்!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 1:33 PM IST
Highlights

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் ஒரு காட்சியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கொச்சைபடத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையிலேயே இப்படியும் நடக்குமா? அல்ல இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதா?  என்றும் பல தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தைப் பார்த்த மக்களில் சிலர் உண்மையிலேயே இப்படியும் நடக்குமா? அல்ல இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதா?  என்று கேள்வி எழுப்புகின்றனர். ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள், கடுமையான சர்ச்சைகள், கண்டனங்களுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சாதீய ரீதியான குற்றச்சாட்டுகள் அதாவது சாதீய திணிப்புகள் இதில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, படத்தில் வரும் கொடூரமான காவல் அதிகாரி வீட்டில், வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் படம் உள்ள காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. அந்த கொடூர காவல் அதிகாரி வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை குறியீடாக டைரக்டர் காண்பித்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது. உண்மையில் நடந்த கதை மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  காவல் அதிகாரி, வன்னியர் இனத்தவர் கிடையாது. வேண்டுமென்றே அப்படி காண்பித்திருக்கிறார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு. இப்படத்தில் ராஜாகண்ணுவை கொலை செய்த காவலர் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்து அவர் வன்னியர் என்ற குறியீட்டை காட்டியது ஏன் என கேள்வி எழுந்திருந்திருகின்றது. ஒரு சமூகத்தின் குறியீடான அக்கினிக் கலசத்தை பின்னணியில் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் வன்முறையாளராக கொலையாளியாக காட்ட முயல்வது மிக மோசமான மனநிலையே. இத்தனைக்கும் உண்மை நிகழ்வில் அந்த காவல் ஆய்வாளர் வன்னியரில்லையென ஆதாரத் தகவல்களோடு சொல்கிறார்கள். மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர் செய்த கொலைக்கு வன்னியரை அடையாளம் காட்டியிருக்கிறார். படம் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள்.

முற்றும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்ட இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்துயரை ரத்தமும் சதையுமாக சொல்கிறது என்கிறார்கள். உண்மையில் கொலை செய்தவன் அந்தோணிசாமிதான். ஆனால் ஏன் வன்னியரை குறியீட்டில் காட்டுகிறான் என்று பொங்கும் விவரம் அறிந்தோர்,  உண்மையில் போராடிய வன்னியர் கோவிந்தனை மறைத்து வழக்கறிகரை போராளி போல காட்டியது ஏன்?  என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. படத்தில் காட்டப்பட்ட அந்த ஓய்வு பெற்ற நீதிபதி 90% வழக்குகளை தள்ளுபடி தான் செய்தார். அரிதிலும் அரிதாக அவர் அனுமதித்த வழக்குகளில் கூட நீதிமன்ற அவமதிப்பு என்று வரும்போது அரசாங்கத்திடம் மிக மிக மிக மென்மையான போக்கையே கடைபிடித்தார். அவரை 'மக்கள் நீதிபதி' என்று சொல்வது ஏற்புடையது அல்ல. வழக்கறிஞர்களை நியமித்து ராஜாகண்ணுவின் குடும்பத்திற்கு நீதி பெற்று தந்தவர் கோவிந்தன் தான். வரே வன்னியர் சமுதாயத்தை சாரந்தவர் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தி படம் எடுப்பது எந்தவிதமான மனநிலை என தெரியவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் கொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி , அதை குரு என்று பெயர் மாற்றியது ஏன் எனவும் பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு படத்தில் ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தியதோடு உண்மையில் போராடியவரை மறைத்து வேறு ஒருவரை போராளி போல் காட்டியிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என பல தரப்பிலும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!