
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படத்தை வினோ வினோத் இயக்குவதாகவும், இதற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு புதிய படத்திற்கு கவுதம் மேனனின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த காக்க காக்க சூர்யா கேரக்டரின் பெயரான அன்பு செல்வன் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவின.
இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்த படக்குழுவினருக்கு கவுதம் மேனனுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த இயக்குனர் கவுதம் மேனன்; தான் இந்த படத்தில் நடிக்கவே இல்லை என்றும் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்ததோடு, "இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அன்பு செல்வன் போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது" என கூறி பகிர் கிளப்பியிருந்தார். பின்னர் அன்பு செல்வன் போஸ்டரை பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.
இந்நிலையில் அன்பு செல்வம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவண்டி எம்எம் ஸ்டுடியோ இயக்குனர் கௌதம் மேனன் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பா.இரஞ்சித் அவர்களுக்கும் இந்த பட விவகாரத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம், இந்தப் படத்தின் PR பணிகளைக் கையாளும் சுரேஷ் மற்றும் தர்மதுரை ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டார்.
எனவே, இனி அன்புசெல்வன் பர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம், என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம், வளர்ந்து வரும் எங்களுக்கு கைகொடுக்க நினைத்து உதவிய இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, நாங்களும், அன்புசெல்வன் படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
செவண்டி எம்எம் ஸ்டுடியோவின் கௌதம் மேனன் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் சாரின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அந்த அறிக்கையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.