சிம்புவின் 'மாநாடு' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை வெளியிட்ட யுவன்..!

Published : Jun 10, 2021, 01:01 PM IST
சிம்புவின் 'மாநாடு' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை வெளியிட்ட யுவன்..!

சுருக்கம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.  

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், கொரோனா இரண்டாவது அலை முடிந்த பின் துவங்கி... மீதம் உள்ள பணிகள் நிறைவடைந்து ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்து படக்குழு அறிவித்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மணிமேகலை உடல்நல குறைவு காரணமாக இறந்ததால், முதல் சிங்கிள்  பாடல் வெளியிட முடியாமல் போனது. இதை அடுத்து, தற்போது  'மாநாடு' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

 மேலும் 'மாநாடு' படத்தின் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூஒன் ரெக்கார்டு என்ற நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!