பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஹீரோயினாகும் மாளவிகா மோகனன்..! வெளியான தகவல்..!

By manimegalai aFirst Published Jun 10, 2021, 12:41 PM IST
Highlights

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 4 திருமணம் குறித்து பரவிய வதந்தி..! சிங்கிள் அண்ட் அவைலபிள் என பதில் கொடுத்த வனிதா விஜயகுமார்!
 

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2 ' படம் இடியாப்ப சிக்கலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே 'இந்தியன் 2 ' படம் குறித்த சில பிரச்சனைகளும் நடந்து வருகிறது.

'இந்தியன் 2 ' படத்திற்காக காத்திருந்து நேரம் வீணடிக்க வேண்டாம் என, இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்து ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார். இதனால் சுதாரித்து கொண்ட 'இந்தியன் 2 ' படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம், 'இந்தியன் 2 ' படத்தை முடிந்து கொடுத்த பின்பே மற்ற படங்களை இயக்குனர் ஷங்கர் இயக்க வேண்டும் என நீதி மன்றத்தில் தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்: ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை மிஸ் செய்த மீனா! ஏன்?
 

இடையில் தன்னுடைய தரப்பில் இருந்த நியாயத்தையும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார். ஒருபுறம் 'இந்தியன் 2 ' பிரச்சனைகள் இருந்தாலும் மற்றொரு புறம் அவ்வப்போது ஷங்கரின் அடுத்த படும் குறித்த சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தான். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் செய்திகள்: பிகினி உடையில் அளவில்லாமல் அள்ளும் கவர்ச்சியில்... அதகளம் செய்யும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!
 

பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.  படத்தின் ஷூட்டிங் மற்றும் பிற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடி போட உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உறுதி செய்தபின்னர் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாளவிகா மோகனன் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தனுஷுக்கு நாயகியாக ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!