
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் குஷி கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் தான் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானை தொடர்ந்து மலையாள திரை பிரபலமான சுரேஷ் கோபி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்..இதையடுத்து தன்னை தனிமாக்கப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..
இவரை தொடர்ந்து மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 வயதான நடிகரும் அரசியல்வாதியுமான அவர், தனது உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் "முன்னெச்சரிக்கைகளுடன் இருந்தபோதிலும், நான் கொரோனாதொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தேன். இதையடுத்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். லேசான காய்ச்சலைத் தவிர, நான் தற்போது நன்றாக இருக்கிறேன், ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த நேரத்தில், ஒவ்வொருவரும் தங்கள் சமூக விலகல் முறைகளில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.