
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.
இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இந்த வாரம் அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமார் பெட்டியுடன் வந்து இந்த டாஸ்க்கை தொடங்கி வைத்தார்.
முதலில் ரூ.3 லட்சத்தில் தொடங்கிய இந்த டாஸ்க் நேற்று எபிசோடு முடியும்போது ரூ.9 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதுவரை யாரும் இந்த தொகையை எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி சிபி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கேபி மற்றும் கவின் ஆகியோர் ரூ.5 லட்சம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது சிபி அதனை முறியடித்து, அதிக பணத்துடன் வெளியேறினார். இதையடுத்து ராஜு முதல் இடத்தையும்,பிரியங்கா, பாவனி முறையாக இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் வெளியே வந்த பிறகு பேட்டியளித்துள்ள சிபி.. வெளியேறும் எண்ணம் வந்த போது 12 லட்சத்திற்கு குறைவாக பெட்டியில் பணம் இருந்திருந்தாலும் எடுத்துக்கொண்டு வெளியேறியிருப்பேன்..உண்மையில் எனக்கு கான்பிடண்ட் குறைந்து விட்டது என கூறியுள்ளார். அதோடு லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்து பாராட்டியதாகவும், விஜயின் குடும்பத்தாருக்கு தன்னை மிகவும் பிடித்திருந்தாக சஞ்சீவ் தெரிவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.