கைதியால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்... போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த விழாவில் பங்கேற்றதால் வந்த வினை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2020, 5:53 PM IST
Highlights

அதற்கு முன்னதாக குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 2 பேரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனிடம் இருந்து மக்களை காப்பதற்காக மத்திய மாநில அரசுகள் படாதபாடு பட்டு வருகின்றன. சிலருக்கு அறிகுறிகளுடனும், சிலருக்கு அறிகுறி இல்லாமலும் பரவும் கொரோனா வைரஸின் தொற்றி சங்கிலியை கண்டுபிடிப்பது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

இதையும் படிங்க: 

இந்நிலையில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சுரமூடு என்ற மலையாள நடிகரை தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெயரறியாதவர் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். கடந்த 23ம் தேதி வெஞ்சரமூடு காவல்நிலையம் அருகே  விவசாய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் அப்பகுதி எம்.எல்.ஏ. முரளி, நடிகர் சுராஜ், அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதையும் படிங்க: 

அதற்கு முன்னதாக குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 2 பேரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். அந்த இருவருக்கும் தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழா நடந்த அன்று காவல்நிலையத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள், எம்.எல்.ஏ. முரளி, நடிகர் சுராஜ் ஆகியோர் 15 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 

click me!