கேப்டன் மகன்னா சும்மாவா?... 30 கிலோ வரை எடையை அசால்ட்டாக குறைத்து ஸ்மார்ட் லுக்கிற்கு மாறிய புகைப்படம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 26, 2020, 05:26 PM IST
கேப்டன் மகன்னா சும்மாவா?... 30 கிலோ வரை எடையை அசால்ட்டாக குறைத்து ஸ்மார்ட் லுக்கிற்கு மாறிய புகைப்படம்...!

சுருக்கம்

எப்படி சினிமாவில் சாதித்து காட்ட வேண்டாம் என்ற எண்ணத்துடன் விடா முயற்சி செய்து வரும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இரண்டு பேரும் அரசியலுக்கு வரலாமா?, வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டிருந்த காலத்திலேயே களத்தில் இறங்கி கலக்கியவர். முதல் தேர்தலிலேயே விஜயகாந்திற்கு மக்களிடம் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. 

இதையும் படிங்க: “கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

அப்படி சினிமா, அரசியல் என இரண்டு விஷயங்களில் சாதித்த விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் விஜய பிரபாகரன் அப்பாவிற்கு துணையாக அரசியலில் களம் இறங்கியுள்ளார். இளைய மகன் சண்முக பாண்டியன் அப்பாவைப் போலவே சினிமாவில் சாதித்துக்காட்ட வேண்டும் என முயன்று வருகிறார்.சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு, 'சகாப்தம்' திரைப்படம் வெளியானது.

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

கலவையான விமர்சனங்களை,  இந்தப்படம் பெற்றாலும் இது சண்முகப்பாண்டியனுக்கு திறமையை வெளிப்படுத்தும் படமாக அமையவில்லை.  இதைத் தொடர்ந்து வெளியான 'மதுரவீரன்' திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடம், சிறந்த நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தது. இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக வாழ்ந்திருந்தார் என சண்முக பாண்டியனை புகழ்ந்து தள்ளினர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இவர் அவருடைய தந்தை விஜயகாந்த் உடன் இணைந்து 'தமிழன் என்று சொல்' என்கிற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

எப்படி சினிமாவில் சாதித்து காட்ட வேண்டாம் என்ற எண்ணத்துடன் விடா முயற்சி செய்து வரும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் சண்முக பாண்டியன் மிகவும் குண்டாக காணப்பட்டார். தற்போது தம்பியுடன் சேர்ந்து 30 கிலோ வரை  உடல் எடையை குறைத்துள்ள சண்முக பாண்டியனின் செம்ம ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட் லுக் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ