
தல அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன், அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் இருவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஹீரோவை காதலித்ததாகவும், பின் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: படுக்கை அறையில் நடிகையுடன் நெருக்கமான காட்சி! விவாகரத்துக்கு காரணம் இதுவா? பற்றி எரியும் நடிகரின் பிரச்சனை!
இந்நிலையில் இவர்கள் இருவரை காதலிப்பதற்கு முன்பே அஜித் மற்றொரு நடிகையை காதலித்துள்ளார் என்கிற புதிய திரியை கொளுத்தி போட்டுள்ளார், பிரபல பத்திரிக்கையாளர். அவர் வேறு யாரும் இல்லை, விஜய்க்கு ஜோடியாக 'தேவா' படத்தில் அறிமுகமாகி, அஜித்துக்கு ஜோடியாக 'வான்மதி' , 'உன்னை தேடி' ஆகிய படத்தில் நடித்த நடிகை ஸ்வாதி தான்.
இவரை அஜித்துக்கு பார்த்ததுமே பிடித்து விட்டதால், அவருடைய அம்மாவிடம் சென்று நேரடியாக அஜித் பெண் கேட்டதாகவும், ஆனால் அவருடைய அம்மாவோ, தன்னுடைய மகள் பெரிய நடிகையாக வேண்டும் அதனால் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லை என்று கூறியதால் அந்த காதலை அவர் கை விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: படுக்கைக்கு மறுத்ததால் பறிபோன பட வாய்ப்பு! மாநிறத்தால் நிராகரிப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் வலி நிறைந்த வெற்றி!
இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரபலம், ஏற்கனவே, நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், பாஜக கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகன் ஒருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதே போல், நடிகை சுனைனா மற்றும் நடிகர் கிருஷ்ணா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியவர்.
மேலும் செய்திகள்: நயன்தாராவுக்கு மட்டும் கோபம் வந்துச்சுனா... என்ன செய்வாங்க தெரியுமா? உண்மையை போட்டுடைத்த டிடி!
இந்த இரண்டு தகவலுமே, இதுவரை உண்மை என உறுதி செய்யப்படாத நிலையில், இந்த தகவலும் ஒரு வேலை வதந்தியாகவே இருக்க கூடும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.