சூர்யாவின் விளக்கம் ‘சிறப்பு’... ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் செல்வன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 29, 2020, 01:22 PM IST
சூர்யாவின் விளக்கம்  ‘சிறப்பு’... ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் செல்வன்...!

சுருக்கம்

இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அத்துடன் சிறப்பு என்ற பதிவிட்டுள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களை பராமரிக்கும் அளவிற்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பராமரிப்பது அவசியம். உண்டியலில் காசு போடுகிறீர்கள் அதே போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் கட்டிடம் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார். 

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சோசியல் மீடியாவில் உலவி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கண்டனங்களும் அதிகரித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா அன்பை விதைப்போம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பிரபல ஹாலிவுட், பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

அதில்,  கோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சில குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கே செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை.  நல்லோர்  சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதவர்களுக்கு, இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்க செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

அறிஞர்கள், ஆன்மிகப், பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம்.  தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள், எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்  இந்த சர்ச்சையை கையாண்டனர். நல்ல எண்ணங்களை விதைத்து செயல்களை அறுவடை செய்ய முடியும். என்ற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்திருக்கிறார்கள். தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அத்துடன் சிறப்பு என்ற பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஜோதிகாவின் கருத்திற்கு விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக கூறி ட்வீட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. அது ஃபேக் ஐடி என்று விளக்கம் அளித்திருந்த விஜய் சேதுபதி தற்போது சிறப்பு என்ற ஒற்றை வார்த்தையில் சூர்யா, ஜோதிகாவிற்கு தனது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளார். மக்கள் செல்வனின் இந்த ட்வீட் லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Spirit Movie : பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது திரைக்கு வரும் தெரியுமா?
Salman Khan: உங்க ஃபேவரைட் ஸ்டார் சல்மானுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கா? நீங்களே பாருங்க!