
விடாமுயற்சி திரைப்படம் இவ்வாண்டு துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா உடன் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.
அதன் பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தல அஜித், நடிகை திரிஷா உள்ளிட்ட விடாமுயற்சி பட்டத்தின் பட குழுஅஜர்பைஜான் என்கின்ற நாட்டிற்கு படப்பிடிப்பு பணிகளுக்காக சென்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் அவர்கள் காலமானார். இது அப்படக் குழுவின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியது விடாமுயற்சி படக்குழு.
கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த தல அஜித் அவர்கள் தற்பொழுது மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. துபாய் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விடாமுயற்சி பட்டத்திற்கான படப்பிடிப்புகள் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித் அவர்கள் தொடர்ச்சியாக 70 நாட்கள் இந்த திரைப்பட பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.