மீண்டும் கெட்டவனான சிம்பு!

 
Published : Jul 09, 2017, 07:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மீண்டும் கெட்டவனான சிம்பு!

சுருக்கம்

Looking for a hit Simbu to revive Kettavan

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப்பின் மீண்டும் ‘கெட்டவன்’ படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார் சிம்பு.

தோல்வியில் இருந்த சிம்பு அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் வெற்றிநாயகனானார். அதை தக்க வைத்துக்கொள்ள திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ நடித்தார். அவர் எதிர்பார்த்த அளவு இந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணைக் கவ்வியது.

இந்நிலையில் தன்னை மீண்டும் ஒரு நல்ல நடிகன் என நிரூபிக்கவும், வெற்றி நாயகனாக நிலைநிறுத்திக்கொள்ள ஆயத்த தாக்கியுள்ளார் சிம்பு. இதனால் கடந்த 2007ஆம் ஆண்டு சிம்புவே இயக்கி பாதியில் நின்றுபோன ‘கெட்டவன்’ படத்தை மீண்டும் கையிலெடுத்து வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது சிம்புவின் எண்ணமாம். அதனால் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளாராம்.

தற்போது கெட்டவன் படத்தை முழுமையாக முடிக்கும் எண்ணத்தில் சிம்பு உள்ளார். AAA படத்தில் அஸ்வின் தாத்தா கெட்டப்புக்காக குண்டாக மாறிய சிம்பு தற்போது, தற்போது ‘கெட்டவன்’ படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 

யுவன் இசையில் உருவாக்கவுள்ள இப்படத்தில் நமீதா மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் நமீதாவோ பிக் பாஸில் பிஸியாக உள்ளதால் 100 நாள்கள் வெளியே தலை காட்ட முடியாத நிலையில் உள்ளார், இதனால் சிம்புவுக்கு ஜோடியாக யார் யார் நடிப்பார்கள் என இன்னும் முடிவாகவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்