நான் அஜித் ரசிகன்... நான் தங்கச்சி... மோதிக்கொண்ட ஆர்த்தி, சக்தி...

 
Published : Jul 09, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
நான் அஜித் ரசிகன்... நான் தங்கச்சி... மோதிக்கொண்ட ஆர்த்தி, சக்தி...

சுருக்கம்

sakthi and arthi fight for ajith song

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12 வது நாளில் போட்டியாளர்கள் மூன்று குழுவாக பிரிந்து, நடனம், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். அப்போது அஜித்தின் "வீரம்" படத்தில் அஜித் அசத்தலாக நடனமாடிய "ஜிங் ஜிக்கா ஜிங்" என்கிற பாடலுக்கு சக்தி, காயத்திரி, ஓவியா, ஆரவ், ஆகியோர்  மிகவும் அருமையாக நடனமாடி பரிசு கோப்பையை பெற்றனர்.

அதற்கு ஆர்த்தி இது தல பாடல் அதனால தான் உங்களுக்கு கிடைத்தது, நீங்கள் நடனமாடியதால் கிடைக்க வில்லை என கூற... சிறு பிரச்சனையாகி பின் ஆர்த்தி வாயை மூடி கொண்டு போய் விட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ரைசாவிடம் ஆர்த்தி ஏதோ சக்தியை பற்றி சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்தது. அப்போது சக்தி நான் அஜித் ரசிகன், ரசிகனால் மட்டும் தான் அவரை உள்வாங்கிக்கொண்டு நடனமாட முடியும் என கூறினார்.

அதற்கு ஆர்த்தி, நீங்கள் நடனமாடிய பாடல் ஸ்டைல் எல்லாம் அஜித்துடையது தானே அப்போ அஜித்தால் தானே உங்களுக்கு பரிசு கிடைத்தது என கூற, கோபமான சக்தி நீங்கள் அஜித் போல் ஆடுறீங்க என்பது தவறில்லை, நாங்கள் ஆடாமல் அஜித் பாட்டுக்காக மட்டும் இந்த பரிசு கொடுத்ததாக நீங்கள் சொல்லுவது தான் தவறு என செம டோஸ் விட்டார் .

உடனே ஆர்த்தி கீழே விழுந்துட்டோம் ஆன ஏன் முகத்துல மண்ணு ஒட்டுல என்பது போல் நான் கேட்பேன் நான் அவருடைய தங்கச்சி என்று கூறிக்கொண்டு பாவமாக அந்த இடத்தை விட்டு சென்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!