பாலச்சந்தர் சிலை திறப்பு; நனவானது வைரமுத்துவின் கனவு!

First Published Jul 9, 2017, 6:58 PM IST
Highlights
Balachander status open today at thiruvaarur


இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் திருவுருவச் சிலை அவரது சொந்த ஊரான நல்லமாங்குடியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. சிலையை அவரது மனைவி ராஜம் திறந்து வைத்தார்.
 
மறைந்த திரைப்பட இயக்குனர் பாலசந்தரின் நினைவாக அவரது சிலையை வடிவமைத்து சொந்த ஊரில் நிறுவ கவிஞர் வைரமுத்து திட்டமிட்டார். பிரபல திரைப்பட இயக்குனரும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட பாலசந்தர் கடந்த 2014 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

அவரது திரைப்படங்களில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளதுடன் மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார். அவரது நட்பு தனக்கு கிடைத்த இறைவன் கொடுத்த பரிசு என்று வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

மேலும் பாலசந்தரின் நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியில் சிலை அமைக்க திட்டமிட்டு இருந்தார். தனது சொந்த செலவில் வெண்கலசிலையையும் அவர் செய்துள்ளார். 

இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. கே. பாலசந்தரின் வெண்கல சிலையை அவரின் மனைவி ராஜம் திறந்து வைத்தார். விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், தயாரிப்பார் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திரையுலகைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வதாக கூறியிருந்த நிலையில், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

click me!