தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக, காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாறன் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் சில ஊடகங்களில், இவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, லொள்ளுசபா மாறனின் புகைப்படங்கள் வெளியானதால், பதறி அடித்து கொண்டு... லொள்ளுசபா மாறன் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடுகிறாரா 'சுந்தரி' சீரியல் கேப்ரில்லா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
undefined
கொரோனா தொற்றுக்கு, கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில், தனக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தும் அதனை அலட்சிய படுத்தியதால் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மாறன் உயிரிழந்தார். பல்வேறு போராட்டங்களை கடந்து, பிரபலமாகி வந்த இவரது இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் இவருக்கு புகைப்படத்திற்கு பதிலாக, லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ஏ1 போன்ற சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள 'மாறனின்' புகைப்படங்களை சில ஊடகங்கள் தவறாக பயன்படுத்தியதால், இந்த செய்தியை கண்ட அவரது உறவினர்கள் பலர் பதற்றபடித்து விட்டனர்.
மேலும் செய்திகள்: குட்டி நயந்தாரானா சும்மாவா? சிம்பிளாக இருந்தால் கூட செம்ம அழகு..! அதிகம் பார்த்திடாத அனிகாவின் போட்டோஸ்..!
பெயரால் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லொள்ளுசபா மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் நல்லபடியாக இருக்கிறேன், அதே மாதிரி நீங்க எல்லாம் நல்லபடியாகவும், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக இருங்கள். கொரனோ பெருந்தொற்று மிகவும் ஆபத்தானது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்". இதை தொடர்ந்து இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.