கொரோனா தடுப்பு பணிக்காக அப்பா சிவக்குமாருடன் வந்து முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய சூர்யா - கார்த்தி...!

By manimegalai aFirst Published May 12, 2021, 7:14 PM IST
Highlights

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிப்பை தவிர்த்து பல்வேறு... சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும், பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், கொரோனா பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளனர்.

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிப்பை தவிர்த்து பல்வேறு... சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும், பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், கொரோனா பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.
 

 

அதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.   முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவியுள்ளார். இன்று மாலை, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த சூர்யா, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதியை வழங்கினார்.

 

முதல்வரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழம்பெரும் நடிகர் சிவக்குமார், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 - வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் - அவரின் அரசியல் வரிசைமுதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் சூர்யாவின் குடும்பத்தினரின் இந்த மிகப்பெரிய உதவிக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!