இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை என்னொட படத்தில வில்லனா நடிக்க வைக்க முயற்சி பண்ணினேன், முடியல.. எனக்கு வெற்றிமாறன் அவர்களை நடிகரா மாத்தனும், சீக்கிரம் மாத்துவேன்னு நினைக்கிறேன் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.
நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், ஜனனி என லியோ படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. லவ் யூ. பூஜைக்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. முதல் மேடை, வெற்றி விழா மேடை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எந்த புரமோஷனும் படத்துக்கு செய்யவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இசை வெளியீட்டு விழா நடக்காதது எனக்கும் வருத்தம்தான். இயக்குநர் வெற்றிமாறனை எனது 2-3 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரை நடிகராக மாற்ற வேண்டும் என ஆசை. விரைவில் அப்படி மாற்றுவேன் என நினைக்கிறேன்.
படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்றார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘என்ன கிஃப்ட் எதிர்பார்க்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, “ஹெலிகாப்டருக்கு பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன்” என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.
கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!