Thalapathy Kutty Story: ஸ்மால் எய்ம் இஸ் எ கிரைம்.. குட்டி கதையில் சூப்பர் ஸ்டாரை சுட்டி காட்டி பேசிய தளபதி!!

Published : Nov 01, 2023, 11:15 PM IST
Thalapathy Kutty Story: ஸ்மால் எய்ம் இஸ் எ கிரைம்.. குட்டி கதையில் சூப்பர் ஸ்டாரை சுட்டி காட்டி பேசிய தளபதி!!

சுருக்கம்

லியோ சக்ஸஸ் மீட்டில், தளபதி விஜய் சூப்பர் தன்னுடைய குட்டி ஸ்டோரியில் ஸ்டாரை சூசகமாக சுட்டி காட்டி பேசியுள்ளார்.  

'லியோ' திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிஸ்ஸான நிலையில், தற்போது சக்ஸஸ் மீட்டை பிரமாண்டமாக நடத்தி, ரணகளம் செய்து விட்டார் தயாரிப்பாளர் லலித் குமார். இந்த சக்ஸஸ் மீட்டில் தளபதி கூறிய குட்டி ஸ்டோரி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தளபதியின் படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்கள் உச்சாகமாகி விடுவார்கள். சக்ஸஸ் மீட்டில் தளபதியே கலந்து கொண்டு பேசுகிறார் என்றால் சொல்லவா வேண்டும். தளபதியின் ஒட்டு மொத்த ரசிகர்கள் கூட்டமே இன்று திரண்டிருந்தது, சென்னை நேரு ஸ்டேடியத்தில் தான். மேலும் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தது, தளபதியின் பேச்சை கேட்கத்தான். 

லைட் வெளிச்சத்தில் மின்னும் செட்... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருகை! களைகட்டும் லியோ வெற்றி விழா!

ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் சத்தத்திற்கு நடுவே அமைதியாக வந்து, அணைத்து பிரபலங்களின் பேச்சையும் பொறுமையாக கவனித்து தளபதி, கடைசியில் பேச வந்தார். அப்போது அவரது ரசிகர்கள் ஆரம்பத்திலேயே தளபதிக்கு குட்டி ஸ்டோரி சொல்ல சொல்லி குரல் எழுப்ப, தன்னுடைய ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரியும் கூறினார்.

அதாவது ஒரு காட்டுக்கு இரண்டு பேரு வேட்டைக்கு போனாங்களாம்.. காட்டுல, முயல், காக்கா, கழுகு என சொன்ன போதே அரங்கம் அதிர்ந்தது. அதில் ஒருத்தர் வில் அம்பு எடுத்தும்,,மற்றொருவர் ஈட்டி எடுத்து செல்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஒருத்தர் முயலை அடித்தார். மற்றொருவர் யானையை குறிவைத்தார் அடிக்க முடியவில்லை. இதில் வெற்றி பெற்றவர் யார் என நினைக்கிறீர்கள்? யானையை குறி வைத்தவர் தான். யாராலும்  முடியாததை குறி வைக்க வேண்டும். அது தான் வெற்றி  இலக்கு பெரிதாக இருக்க வேண்டும். Small aim is a crime என கலாம் சொன்னதை சுட்டிக்காட்டினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது