அடுத்த தலைவர்.. விரைவில் அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்.. சீக்ரெட் உடைத்த அர்ஜுன்..!!

மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்துன்னு சொல்வார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ‘த்தேறிக்க’ என்கிறார்கள் என்று கூறினார் நடிகர் அர்ஜுன்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

Latest Videos

இத்திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான சக்சஸ் மீட், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் லியோ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆக்ஷன் கிங் அர்ஜுன், “மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்துன்னு சொல்வார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ‘த்தேறிக்க’ என்கிறார்கள்.

‘மங்காத்தா’ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தேன். அதன் பிறகு ‘லியோ’வில் நடித்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் ஜோடியாக இல்லை. சிவாஜிக்கு பிறகு விஜய்யிடம் நேரம் தவறாமையை பார்க்கிறேன். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே செட்டுக்கு வந்துவிடுவார். அவ்வளவு அர்ப்பணிப்புள்ள சிம்பிளான ஒருவர். விஜய்க்கு தலைவருக்கான தகுதி உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று அர்ஜுன் பேசினார்.

கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!

click me!