Leo Censor Details: 'லியோ' படத்தின் சென்சார் விவரம் வெளியானது!

By manimegalai a  |  First Published Oct 4, 2023, 8:15 PM IST

தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள 'லியோ' படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 


தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' திரைப்படம் இலட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள... இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வகையில், தற்போது லியோ படத்தின் சென்சார் சான்று குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லியோ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நாளைய தினம், இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Jovika: அழுது கொண்டே ஜோவிகா சொன்ன விஷயம்! கை தட்டி உற்சாக படுத்திய ஹவுஸ் மேட்ஸ்.. எமோஷ்னல் வீடியோ!

'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிரபல நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. தளபதி விஜய் லியோ படத்தை தொடர்ந்து தன்னுடைய 68-ஆவது  படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

CENSORED U/A 🔥 pic.twitter.com/FtNdFd0AYV

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

 

click me!