Kamalhaasan : தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகையின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மாவின் இழப்பு, மலையாள திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 79 வயதான அவர் கடந்த பல வாரங்களாகவே கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். வயது மூப்பின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்து போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாகி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அவர் காலமானார்.
மலையாள சினிமாவை பொறுத்தவரை 1950களின் (1958) பிற்பகுதியில் அறிமுகமான அவர், பல சிறந்த படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மலையாள திரை உலகை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகையாக கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர் அவர். குறிப்பாக மோலிவுட் உலகின் டாப் நடிகர்களான பிரேம் நாசர், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் திலீப் உள்ளிட்ட பலருக்கு இவர் அன்னையாக பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
undefined
கமலை அடுத்து மெகா ஹிட் கோலிவுட் நடிகருடன் இணையும் STR? இயக்குனர் யார் தெரியுமா?
அதிலும் குறிப்பாக பிரபல நடிகர் மோகன்லாலுடன் ஒரு அன்னையாக மிக நெருங்கிய ஈர்ப்பு கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்ற கவியூர் பொன்னம்மா, கடந்த 2011 ஆம் ஆண்டு தனது கணவரை இழந்தார். மலையாள திரை உலகை தாண்டி இந்திய திரையுலகை பொருத்தவரை மிக மூத்த மற்றும் மதிப்புமிக்க நடிகையாக கடந்த 65 ஆண்டு காலமாக பயணித்து வந்தார்.
'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம்,… pic.twitter.com/wU0tLuLNSn
அவர் அவருடைய மறைவுக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில், அவரை முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த உலக நாயகன் கமல்ஹாசன் கவியூர் பொன்னம்மா குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "சத்யா" இந்த திரைப்படத்தின் மூலம் தான் பொன்னம்மா தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அவரோடு பயணித்தது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!