"இத்தனை வருஷமா ஏன் புகார் கொடுக்கல? எல்லாம் சதி" - உச்சகட்ட கோபத்தில் ஜானி மாஸ்டர் மனைவி!

By Ansgar R  |  First Published Sep 20, 2024, 10:45 PM IST

Jani Master Wife : பிரபல நடன இயக்குனர் ஜானகி மாஸ்டர் பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஆந்திராவை சேர்ந்த பிரபல நடன இயக்குனர் ஜானகி மாஸ்டர் கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் நடன இயக்குனராக களம் இறங்கினார். இவர் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கிய வெகு சில ஆண்டுகளிலேயே முன்னணி டான்ஸ் மாஸ்டராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தெலுங்கு திரை உலகில் வெறும் 7 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி டாப் டான்ஸ் மாஸ்டராக மாறினார் ஜானி. 

கடந்த 2017ம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான "குலேபகாவலி" என்கின்ற திரைப்படம் தான் இவர் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டர் களமிறங்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "மாரி" படத்தின் இரண்டாம் பாகம் தான், ஜானி மாஸ்டருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ச்சியாக தமிழில் "நம்ம வீட்டு பிள்ளை", "பட்டாஸ்", "டாக்டர்", "எதற்கும் துணிந்தவன்", தளபதியின் "பீஸ்ட்" & "வாரிசு", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

"உங்க ஆட்சியில் தான் நடந்திருக்கு பவன்" திருப்பதி லட்டு விவகாரம் - பொங்கியெழும் பிரகாஷ் ராஜ்!

இந்த 2024ம் ஆண்டில் மட்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் இவருடைய நடன அமைப்பில் ஏழு திரைப்படங்கள் உருவாகியுள்ளது. அதில் ஏற்கனவே ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவை பொறுத்தவரை டாப் டான்ஸ் மாஸ்டராக ஜானி பயணித்து வந்த இந்த சூழலில் தான், அவர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டது. 

ஏற்கனவே மலையாள திரையுலகில் இந்த பாலியல் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது அவரோடு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்பொழுது ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா அளித்த பேட்டி இப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டான்ஸ் மாஸ்டர் ஜானி, 16 வயது நிரம்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் சில ஆண்டுகள் கழித்து அளித்த புகாரின் பெயரில் தான் இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி பேசிய அவரது மனைவி சாயிஷா "எனது கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர் அப்படிப்பட்டவர் அல்ல, 16 வயதில் அந்த பெண்ணுக்கு எனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் அந்த பெண் இத்தனை ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தார்?" 

"இது எல்லாமே அவருடைய வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட பலர் பரப்பிவிடும் வதந்திகள் தான். குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து வருபவர்கள், அதற்கான ஆதாரங்களையும் கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார் ஆயிஷா.

'வேட்டையன்' ஆடியோ லாஞ்சில் புகுந்த போலி டிக்கெட்! 500-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

click me!