
அண்மையில் தமிழ் திரை உலகை உலுக்கிய மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று தான், பிரபல நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்த விஷயம். கடந்த 2009ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணமான நிலையில், அவர்களுடைய 15 ஆண்டு கால உறவை முடித்துக்கொள்ள விரும்பி, தற்பொழுது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக விண்ணப்பித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் இந்த விஷயத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், ஜெயம் ரவியை கடந்த சில வாரங்களாகவே சந்திக்க முயற்சி செய்து தனக்கு தோல்வியை மிஞ்சியதாகவும் ஆர்த்தி கூறியுள்ளார்.
ஜெயம் ரவியை அவரது மனைவி ஆர்த்தியின் பெற்றோர் சுதந்திரமாக திரைப்படங்களில் நடிக்க அனுமதிப்பதில்லை என்றும், அவருடைய திரைப்பட பணிகள் அனைத்திலும் அவர்களது தலையீடு இருப்பதாகவும். அந்த விஷயத்தால் தான், தனது மனைவியை அவர் பிரிய முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் பிரபல பாடகி ஒருவரோடு ஜெயம் ரவி இணைத்து பேசப்பட்ட நிலையில், அந்த சர்ச்சை குறித்த விளக்கத்தையும் இன்று பகிரங்கமாக பொதுவெளியில் மறுத்திருக்கிறார் ஜெயம் ரவி.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில், தங்களுடைய 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, தன்னுடைய மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்தை பெற்று தர வேண்டும் என்று மனு ஒன்றை ஜெயம் ரவி தாக்கல் செய்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற தகவல்கள் அண்மையில் வெளியானது.
இந்த சூழலில் பிரபலம் ஒருவர் பகிர்ந்த தகவலின்படி, தனது மனைவியிடம் இருந்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஜெயம் ரவி மீட்டெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவரது மனைவி ஆர்த்தி தான் உபயோகித்து வந்ததாகவும், இப்பொழுது தனது திரைப்பட ப்ரமோஷன் பணிகளுக்கு அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மிகவும் அவசியம் என்பதால் "மெட்டா" நிறுவனத்திடம் முறையிட்டு தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை அவர் மீட்டெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சல்மானுடன் இணையும் அட்லீ.. மெகா ஹிட் தமிழ் நடிகரிடம் நடந்த பேச்சு வார்த்தை - ஓகே சொல்லிட்டாரா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.