ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் குற்றங்கள் செய்கிறார் சுசி கணேசன்’ லீனா மணிமேகலை பாய்ச்சல்

By vinoth kumarFirst Published Oct 17, 2018, 9:36 AM IST
Highlights

நேற்று பத்திரிகையாளர் சந்திப்புகளை மாற்றி மாற்றி நடத்தி மீடியாவுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு தீனி போட்டார்கள் பெரும்பட இயக்குநர் சுசி கணேசனும், குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையும்.

நேற்று பத்திரிகையாளர் சந்திப்புகளை மாற்றி மாற்றி நடத்தி மீடியாவுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு தீனி போட்டார்கள் பெரும்பட இயக்குநர் சுசி கணேசனும், குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையும். 
 
மாலை 4 மணிக்கு லீனா பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின் சுசி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதால் அவரது குற்றச்சாட்டுகளுக்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார் லீனா. 1. மிரட்டல் கட்டம் முடிந்து கணேசன் பல வகைகளில் யோசித்து பொய்களை அவிழ்த்து விடுகிறார். அப்பட்டமான பொய்கள் மூலம் என்னை சாய்த்துவிட முடியாது.சுசி கணேசன் தீபம் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்த வருடம் 2005. அவரை விருந்தினராக அழைத்தது நிர்வாகம் தான்.நானல்ல.

2. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, VJ ஆக இருந்ததால் பல இலக்கிய புத்தக நிகழ்ச்சிகளை நட்புக்காக தொகுத்து வழங்கியிருக்கிறேன்.சுசி கணேசன் குறிப்பிடும் புத்தகத்தை கலைஞன் பதிப்பகத்திற்காக (இரண்டு வருடங்களுக்கு முன் கூட என் நூலொன்றை பதிப்பித்தது கலைஞன் பதிப்பகம்) நான் தொகுத்து வழங்கியது அதற்கும் முன்பு. அப்போதும் சுசி கணேசன் என்பவர் என் நண்பர் இல்லை.

3. நானும் ஜெரால்டும் சுசி கணேசனை எங்கள் ஸ்டூடியோவிற்கு ஒரு நாளும் அழைத்ததில்லை.

4. என் முதல் தொகுப்பு வந்த வருடம் 2003. என் முதல் ஆவணப்படம் வந்த வருடம் 2002. எனக்குப் படங்களுக்கு பாட்டெழுதும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. நான் உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படும் அளவு தகுதியான இயக்குநராக சுசி கணேசன் எப்போதும் இருந்ததில்லை.

5. எனக்கு போதுமான அளவு புகழ் இருக்கிறது. என் மீது நடந்த அத்துமீறலை சொல்வதால் எனக்கு தான் வாய்ப்புகள் குறையும். தகாத பேச்சுகள் பெருகும். Problemetic பெண்ணாக அடையாளப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் படுவேன். இதில் இழப்பு எனக்குத் தான். இந்த சமூகம் குற்றவாளிகளாக இருந்தாலும் ஆணுக்குத் தான் சலுகைகளை அளிக்கும்.

6. என் body language குறித்து விமர்சனம் வைக்கிறார் சுசி கணேசன். குற்றவாளிகள் தான் கூனி குறுகி கண்ணீரும் கம்பலையுமாக நிற்க வேண்டும். என் மிடுக்கை எதற்காகவும் விட்டுத் தர முடியாது.

7. பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தில் அக்கறையிருப்பவர்கள் நம்புவது. பேஷன் அல்ல.

8. நான் எழுதும் கவிதைகளில் இருக்கும் வார்த்தைகள் சுசி கணேசன் போன்ற ஆதிக்க மனம் இருப்பவர்களுக்கு கொச்சையாகத் தான் தெரியும். இலக்கியம் வாசித்திருந்தால் ஏன் திருட்டுப்பயலே எடுக்கப்போகிறார்?

ஆக சுசி கணேசன் சத்தியம் செய்து, கடவுளை சாட்சியாக கூப்பிட்டு பொய்கள் தன்னைக் காப்பாற்றும் என நம்புகிறார். ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் எவ்வளவு குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. கடும் பிரயத்தனம் தான். 2005-ல் இருந்த லீனா மணிமேகலை இல்ல நான். சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது. என் மடியில் கனம் இல்லை. உரம் மட்டுமே!

click me!