நடிகை மீது புகார் கொடுத்த நடிகர்... தலைகீழாக மாறும் காட்சிகள்!

By vinoth kumarFirst Published Oct 16, 2018, 5:45 PM IST
Highlights

அடிதடி பிரச்சனைக்கு நடிகை ராணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதே சமயம், அபாண்டமாக என் மீது பாலியல் புகார் கூறிய அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சண்முகராஜன் கூறியுள்ளார்.

அடிதடி பிரச்சனைக்கு நடிகை ராணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதே சமயம், அபாண்டமாக என் மீது பாலியல் புகார் கூறிய அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சண்முகராஜன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, சில குத்துப்பாடல்களால் பிரபலமாகி, இன்று டிவி தொடர்  மூலம் தமிழ்ப்பெண்களை கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருப்பவர் ‘ஓ போடு...’ ராணி. சன் டிவியில் நந்தினி சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்த சீரியலில் 'ஓ போடு...' புகழ் நடிகை ராணி மற்றும் விருமாண்டி படத்தில் அறிமுகமான நடிகர் சண்முகராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். நந்தினி தொடரின் படப்பிடிப்பு சென்னை அருகே செங்குன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பின்போது, சண்முகராஜன் கன்னத்தில் நடிகை ராணி அறைவதுபோல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது, ராணி பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஓங்கி அறைந்ததாகவும், டைரக்டர் கட் சொன்ன பிறகும் ராணி தொடர்ந்து சண்முகராஜனை ராணி அறைந்ததாகவும், பதிலுக்கு ராணியை சண்முகராஜன் அறைந்ததாகவும் தெரிகறது. தன் மனைவி ராணியை அறைந்த சண்முகராஜனை அவரது கணவர் அறைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து நடிகை ராணி, சண்முகராஜன் மீது போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இவர்களது இந்த சண்டையால் நந்தினி படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், தொடரின் இயக்குநர், சண்முகராஜனை, போலீஸ் நிலையம் அழைத்துப்போய் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். இதனை அடுத்து, ராணியிடம் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டார். பதிலுக்கு சண்முகராஜன் மீது அளித்த புகாரை ராணி வாபஸ் பெற்றுக் கொண்டார். 

350 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு சண்முகராஜனை மன்னித்து பாலியல் பலாத்காரத்தை வாபஸ் பெற்றதாக நடிகை ராணி கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சண்முகராஜன், நானும் டைரக்டரும், போலீஸ் நிலையம் சென்றோம். அப்போது, நடந்த விவரத்தை கூறினோம். கைகலப்பு பிரச்சனையை போலீசார் சமரசப்படுத்தி எங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், நடிகை ராணியோ, என் மீது அபாண்டமாக பாலியல் புகார் கூறியிருந்தார். தயாரிப்பு நிர்வாகமே எனக்கு ஓட்டலில் ரூம் வசதியை செய்து கொடுத்தது. 

25 நாட்களாக அங்கு நான் தங்கியிருக்கேன். ஆனால், நடிகை ராணியோ, என் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதனால் நான் எனது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். என் வாழ்க்கையில் இதுபோன்ற அவதூறு வந்ததே இல்லை. ஆனால் இவர்கள், என் மீது அபாண்டாக பழி சுமத்தி உள்ளார். நடிகை ராணியின் பொய் புகாருக்கு, நடிகர் சங்கம் தலையிட வேண்டும். என் மீது தப்பி இருந்தால் எனக்கு ரெட் கார்டு போட வேண்டும். அல்லது அவர் மீது தவறு இருந்தால் அவருக்கு ரெட் கார்டு போட வேண்டும். இது குறித்து நாசரிடம் பேசியுள்ளேன். 

அவர்கள் அடித்ததற்கு நான் பதிலுக்கு திருப்பி அடித்தேன். அவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என்பது குறித்த எனக்கு தெரியாத நிலையில், என் மீது அபாண்மாக பொய் புகார் கூறியுள்ளார். என் மீது தவறான செய்தி நேற்று பரப்பப்பட்டுள்ளது. இந்த உண்மையை மீடியாக்களும் சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். 

இது தொடரக் கூடாது. எனவே இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். நந்தினி சீரியல் நடிகர்களே எனக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். அடிதடி பிரச்சனைக்காகத்தான் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டேன். மீடூ பிரச்சனைக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். அதற்காக அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய அவர் மீது பாதிக்கப்பட வேண்டும்.

click me!