
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தற்போது அவர்கள் மீ டூ என்ற மூவ்மெண்ட் மூலம் வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். மேலும் இது குறித்து வட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து, தானும் ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை ஆண்டுகளாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே , பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்கறிஞர்களுடன் சின்மயி ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், ஆதாரம் இல்லாமல், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது என அவர்கள் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் இன்னும் சிறிது நாட்களில் வைரமுத்து – சின்மயி பிரச்சனை காணாமல் போகும் என்றும் பொதுவாக கருத்து நிலவுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.