நடிகை இயக்குனர், தயாரிப்பாளர், என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைகாட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக டல்லடித்து வந்த இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், லட்சுமி ராமகிருஷ்ணன் மீதே ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அவர் யார் என்கிற தகவலை நிகழ்ச்சி குழுவினர் வெளியிட வில்லை.
இந்த நிகழ்ச்சி குறித்து வெளிவந்துள்ள ப்ரோமோவில்... 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் இயக்குனர் எட்வர்ட், லட்சுமி ராமகிரிஷ்ணனிடம் சென்று உங்களை பற்றி ஒரு புகார் வந்துள்ளது என கூறுகிறார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் கோபமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்.
பின் இந்த நிகழ்ச்சியை சேர்ந்தவர்கள் லட்சுமி ராமகிரிஷ்ணனை பின் தொடர்வது போல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவும் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த கையாளும் உக்தி தான் என்பது எத்ததை பேருக்கு தெரியும்...
அந்த காட்சி

லட்சுமி ராமகிருஷ்ணனின் மீது புகார் கொடுத்தது யார்? சொல்வதெல்லாம் உண்மையில் நடந்தது என்ன?#ZeeTamil #SolvathellamUnmai pic.twitter.com/4qbIGhb9A4
— Zee Tamil (@ZeeTamil) December 4, 2017

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.