
கடந்த ஆண்டு உலக மக்கள் அனைவரின் பார்வையையும் தமிழ் நாட்டுப் பக்கம் திருப்பியது ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தில் எந்த வித பாகுபாடும் இன்றி பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் இறந்த இளைஞர்:
பல்வேறு, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்ட இந்த ஜல்லிக்கட்டுப் போரட்டத்தின் போது, சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்கிற இளைஞர் மின்சார ரயிலின் கம்பி எதிர்ப்பாராத விதமாக மேலேப்பட்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆறுதல் கூறிய லாரன்ஸ் :
நடிகர் லாரன்ஸ் இந்த விபத்தில் மரணமடைந்த, யோகேஷ்வரனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியது மட்டும் இன்றி, நான் உங்க மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறேன் என்று கூறினார்.
சொன்னதை செய்த லாரன்ஸ்:
மகனாக இருந்து அவர்களை பார்த்துக்கொள்வேன் என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்கான ஏற்பாடுகள் செய்தார்.
மேலும் அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்வதற்காக ஒரு இடத்தை வாங்கி அதில் 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். விரைவில் இந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.