
80களில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகை பிந்துகோஷ். இவர் மருத்துவ உதவிக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் உடனடியா தனது தேவி அறக்கட்டளை மூலம் நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.
அதனை தொடந்து மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகை பிந்துகோஷ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்க்கொண்டு உதவிகள் வழங்கிடவும் ஏற்பாடு செயாப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் விஷால்.
இன்று அதற்கான உதவித்தொகையை விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் நடிகை பிந்துகோஷை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.