என்னது லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரா?

 
Published : Feb 06, 2018, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
என்னது லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரா?

சுருக்கம்

What is Lady Super Stara in Lakshmi Short film director


சர்ஜூன்

மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான சர்ஜூன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு வெளியான லட்சுமி என்ற குறும்படம் சர்ச்சை ஏற்படுத்தியது.
அவருடைய இயக்கத்தில் வெளியான மா என்ற குறும்படமும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து சர்ஜூன் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சுமி

சர்ஜூன் இயக்கிய 'லட்சுமி' என்ற குறும்படத்தில் லட்சுமி சந்திரமௌலி லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெண் பாலியல் சுதந்திரத்தை பற்றி பேசும் இப்படம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது.அதெப்படி ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவர்களாக காண்பிப்பார்கள் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் இந்த படத்திற்கான கதைக்காகவே இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்தார்கள். பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் 10 க்கும் மேற்பட்ட விருதுகளையம் அள்ளிச் சென்றது. மேலும் யு டியூபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

மா

சர்ஜுன்  இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் 'மா'. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.சிறிய வயதில் கர்ப்பமாகும் தனது மகளை தாய் அந்த சூழ்நிலையில் இருந்து எப்படி விடுவித்து கொண்டு வருகிறாள் என்பதே கதை.இதில் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.



சத்யராஜ்

இயக்குனர் சர்ஜூன் சத்யராஜை வைத்து எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்று படத்தை எடுத்து வருகிறார். இப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ளது. இந்தநிலையில், மேலும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.


நயன்தாரா

அறம், குலேபகாவலி படங்களை தயாரித்த கே.ஜி.ஆர் ஸ்டூடியோ தனது மூன்றாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தை லட்சுமி, மா குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்க நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மீண்டும் மாயா, டோரா

மீண்டும் மாயா, டோரா பாணியில் திகில் படமாக இப்படம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திரைக்கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

சர்ச்சை

இந்தியன் 2 வில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இப்படமும் சர்ச்சை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!