'மா' குறும்படத்தில் துணிச்சலான அம்மாவாக நடித்த 'கனி கஸ்தூரி' பற்றி தெரியுமா? 

 
Published : Feb 06, 2018, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
'மா' குறும்படத்தில் துணிச்சலான அம்மாவாக நடித்த 'கனி கஸ்தூரி' பற்றி தெரியுமா? 

சுருக்கம்

maa short flim actress kani kasthuri

குடியரசு தினத்தன்று இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய திரைப்படம் 'மா'. இந்த படத்தில் துணிச்சலான அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் நடிகை 'கனி கஸ்தூரி'.

இதுவரை பார்த்திராத திராவிட முகம் கொண்ட பெண் என்று பலருக்கும் இவரை பார்த்த போது தோன்றி இருக்கலாம். ஆனால் இவர் மலையாள திரைப்படங்களிலும் சில தமிழ் திரைப்படகளிலும் கூட நடித்துள்ளார். தற்போது தான் இப்படி ஒரு திறமையான நடிகை உள்ளார் என  இவரை பற்றி வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

கனி கஸ்தூரி:

இயக்குனர் சர்ஜன் இயக்கத்தில் வெளிவந்த 'மா' குறும்படத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் போதே கர்பமாகும் பெண்ணின் தாயாக மிகவும் இயல்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர் கனி கஸ்தூரி. இவர் ஏற்கனவே மலையாள சினிமாவில் , 'சிக்கர்' ,  'காக்டைல்' , 24 நார்த் காதம்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலம்மானவர். 

தமிழில் நடித்த படங்கள்:

இவர் தமிழில் பர்மா, பிசாசு ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு இது போல் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடிக்க தான் மிகவும் பிடிக்குமாம்.

முறையான பயிற்சி:

கனி கஸ்தூரி முறையாக கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றவர். மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!