தேசிய விருது பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் ஜீவா..... கீ யிற்கு பிறகு ஜிப்சி....

 
Published : Feb 06, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
தேசிய விருது பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் ஜீவா..... கீ யிற்கு பிறகு ஜிப்சி....

சுருக்கம்

National award winning director Jeeva

கீ

அறிமுக இயக்குநர் காலிஸ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் கீ.இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அனைகா நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி,சுஹாசினி போன்றோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜீவா ஒரு ஹேக்கராக நடித்துள்ளார்.தொழில்நுட்பம் சார்ந்த கதைக்களம் கொண்ட இப்படத்தை ஜீவா பெரிதும் நம்பியுள்ளார்.

தேசிய விருது இயக்குநர்

தற்போது ஜீவா நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ஜிப்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கியவர் ராஜூமுருகன். இந்த படங்களை இயக்கியதற்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

வசனகர்த்தா ராஜுமுருகன்

தன் சொந்த அண்ணனான சரவணன் ராஜேந்திரன் படத்திற்கு வசனம் எழுதியுள்ள ராஜூமுருகன் தெலுங்கில் வெளி வந்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.இப்படத்தை பாலா இயக்க விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக நடிக்கிறார்.

3வது படம்

இந்நிலையில் ராஜுமுருகன் தனது மூன்றாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு ஜிப்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்களின் தேர்வு நடைப்பெற்று வருவதாகவும் படத்தின் சூட்டின் மே மாதம் தொடங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்சி படத்தில் நடிக்க இயக்குநர் ராஜுமுருகன் முதலில் நடிகர் சூர்யாவைத்தான்  அணுகினாராம்.ஆனால் கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக அவர் மறுத்ததால், ஜீவாவிடம் அடுத்து கதை சொல்லியிருக்கிறார் ராஜுமுருகன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?