நடிகை ரம்யாவால் தான் நான் இப்படி ஆனேன் – சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்ட குட்டி ராதிகா!

By Rsiva kumar  |  First Published Jan 25, 2025, 7:08 PM IST

Kutty Radhika Talka about her thoughts on Actress Ramya : நடிகை ராதிகா குமாரசாமி, நடிகை ரம்யா குறித்த தனது எண்ணங்களையும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்.


Kutty Radhika Talka about her thoughts on Actress Ramya : தமிழ் சினிமாவில் இயற்கை படம் மூலமாக பிரபலமானவர் நடிகை ராதிகா. இவரை குட்டி ராதிகா என்று செல்லமாக அழைப்பது வழக்கம். இயற்கை படத்திற்கு பிறகு வர்ணஜாலம், மீசை மாதவன் என்று தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால் கன்னட சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதே போன்று தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ரத்தன் குமார் என்பவரை குட்டி ராதிகா திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து 2007 ஆம் ஆண்டு கர்நாடகா முதல்வராக இருந்த ஹெச் டி குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு ஷமிகா என்ற மகள் பிறந்தாள். தற்போது 38 வயதானாலும் இன்னும் இப்போதைய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் ஜொலிக்கிறார்.

Latest Videos

பவதாரிணியின் நினைவு நாள் - இளையராஜா வேதனை பதிவு!

இந்த நிலையில் தான் தன்னுடைய அழகின் ரகசியம் மற்றும் கன்னட சினிமாவில் எப்படி இந்த அழகை காப்பாற்றிக் கொள்கிறார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். 'நான் முதலில் இப்படி இல்லை. அழகு பற்றி எதுவும் தெரியாது. நான் இவ்வளவு மாறக் காரணம், நடிகை ரம்யா' என்று கூறியுள்ளார். ரம்யாவிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அழகு குறிப்புகள் எல்லாம் அவர்தான் சொல்லிக் கொடுத்தது.

நெயில் வொர்க், நெயில் பாலிஷ் எப்படி மேட்சிங் ஆகப் போட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. லக்கி படத்தின் சமயத்தில் (2016) நடிகை ரம்யாவுடன் நெருக்கமானேன். அப்போது அவர் எனக்கு எப்படி ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும், நெயில் பாலிஷ் போட வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இன்று நான் இவ்வளவு ஸ்டைலாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் ரம்யாதான்' என்று கூறியுள்ளார்.

அஜித் முன் அவரின் சூப்பர் ஹிட் மெலடி பாடல் பாடி அசத்திய ரசிகர்;வீடியோ!

2016 இல் வெளியான லக்கி படத்தின் சமயத்தில், ரம்யாவும் ராதிகாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதுகுறித்து முன்பு ரம்யாவும் பேசியிருந்தார். ராதிகா மிகவும் அற்புதமான மற்றும் நல்ல நடிகை. நல்ல பெண் கூட. அவர் எனக்காக லக்கி படத்தைத் தயாரித்தார். ராதிகா மிகவும் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வளர்ந்தவர். சினிமாவுக்குள் அவர் நுழைந்தபோது நானும் உதவி செய்தேன். அவர் மிகவும் நல்ல பெண் என்பதால், எனக்கு எப்போதும் அவர் மீது ஒரு பாசம் உண்டு' என்றார்.

அவர் சினிமாவுக்கு வந்தபோது அந்த நாட்கள் எப்படி இருந்தன என்பதை முதல் நாளிலிருந்தே நான் அறிவேன். அதனால் அவர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. தேர்தல் சமயத்திலும் என் பக்கம் நின்றார். நான் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது' என்றார் ரம்யா. நடிகை ரம்யாவைப் பொறுத்தவரை, தற்போது அவர் சினிமாவிற்கு விடை கொடுத்துவிட்டார். அவர் எப்போது திரும்பி வருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!

எம்.பி. பதவிக்கு திடீரென உயர்ந்தாலும், ஏதோ காரணங்களால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், அரசியலில் இருந்தும் விலகிவிட்டார். யுஐ படம் வெளியான சமயத்தில், 'நல்ல கதை கிடைத்தால் விரைவில் சினிமாவுக்கு வருவேன்' என்று கூறியிருந்தார். அவரது திருமணம் குறித்தும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

click me!