Latest Videos

வாட்டர் பாட்டில் விற்ற சிறுவனின் வாழ்க்கையில் ஒளியேற்றிய KPY பாலா... கண்கலங்கி நின்ற தாய் - நெகிழ்ச்சி வீடியோ

By Ganesh AFirst Published Jun 17, 2024, 11:51 AM IST
Highlights

குடும்ப வறுமை காரணமாக பெட்ரோல் பங்கில் வாட்டர் பாட்டில் விற்று வந்த சிறுவனுக்கு KPY பாலா செய்த உதவியால் அவரது தாய் கண்கலங்கி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி அலப்பறைகள் பாலாவை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தி சென்றது. சினிமா வாய்ப்புகள் குவிந்ததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய பாலா, பிசியாக காமெடி வேடங்களில் நடித்து வந்தார். 

பின்னர் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதன் இசைவெளியிட்டு விழா, சக்சஸ் மீட் போன்றவற்றை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார் பாலா. அதுமட்டுமின்றி அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிக் டிக் டிக் என்கிற கேம் ஷோவை கீக்கி விஜய் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் இவர் சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... “கல்யாண பிசியில் புரமோஷனுக்கே வரல.. இதையாவது பண்ணிருக்கலாம்..” தயாரிப்பாளரை புலம்ப விட்ட அர்ஜுன் மருமகன்..

இப்படி சினிமா மற்றும் சின்னத்திரையில் பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுத்து வருகிறார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, படிக்க கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி செய்வது, வீடு கட்டி கொடுப்பது என எக்கச்சக்கமான உதவிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்து வருகிறார் பாலா.

இந்த நிலையில், அண்மையில் தான் அடிக்கடி பெட்ரோல் போட போகும் பங்க் ஒன்றில் சிறுவன் ஒருவன் வாட்டர் பாட்டில் விற்பதை பார்த்த பாலா, அந்த சிறுவனை அழைத்து அவனது குடும்ப கஷ்டத்தை கேட்டறிந்ததோடு, அவனை தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்கு சென்ற பாலா, அந்த சிறுவனிடம் நான் படிக்க பணம் கொடுத்தால் இனி வேலைக்கு போக மாட்டியா என கேட்க, அவனும் சரி என சொன்னவுடன் ஒரு வருடத்திற்கு அவனது படிப்புக்கு தேவையான தொகையை அவனது தயாரிடம் நேரில் கொடுத்துள்ளார். பாலாவின் இந்த எதிர்பாரா உதவியால் நெகிழ்ந்து போன அந்த சிறுவனின் தாய் கண்கலங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Exclusive : ஹிப்ஹாப் ஆதி பாணியில் ராப் இசையில் கலக்கும் தமிழன்... எழில் குமரனின் எக்ஸ்குளூசிவ் நேர்காணல்

click me!