"நீ தான் பெஸ்ட் அப்பா".. தந்தையர் தினத்தில் மகன்களோடு லூட்டியடிக்கும் விக்கி.. நயன் வெளியிட்ட Cute Video!

By Ansgar RFirst Published Jun 16, 2024, 5:10 PM IST
Highlights

Vignesh Shivan : இன்று தந்தையர் தின விழாவை தனது இரு மகன்களோடு ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சென்னையில் பிறந்து வளர்ந்த விக்னேஷ் சிவனுக்கு வயது 38, அவர் கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய விக்னேஷ் சிவன், 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் அறிமுகமானார். 

தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்கங்களுக்கான விருதை வழங்கி சிறப்பித்தது சைமா. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் போது தான் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ்மனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Latest Videos

Actor Karthi : என்ன மாமா சௌக்கியமா! ரசிகரின் இல்ல காதணி விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி

அதன் பிறகு தமிழில் "தானா சேர்ந்த கூட்டம்", "பாவக்கதைகள்" மற்றும் "காத்துவாக்குல ரெண்டு காதல்"  உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை திருமணம் செய்து கொண்டார், தற்பொழுது இந்த தம்பதிக்கு இரு உயிர் மற்றும் உலகு என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டில் தங்களுடைய கோடை விடுமுறையை கழித்து வரும் இந்த குடும்பம், தந்தையர் தினத்தையும் ஜாலியாக கொண்டாடி வருகின்றனர். தனது இரண்டு மகன்களோடு பொழுதை ஜாலியாக கழித்த விக்னேஷ் சிவனின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. "நீ தான் இந்த உலகத்தின் சிறந்த அப்பா" என்று கூறி அவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். 

Happy Father’s Day to all the Fathers in the World😇 pic.twitter.com/fVKfL0q03R

— Nayanthara✨ (@NayantharaU)

விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சீமான் அவர்கள் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

"மகாராஜா" படத்தில் நான் தான் நடிப்பேன்.. அடம்பிடித்த ஹிட் நடிகர் - பின் விஜய் சேதுபதி கமிட்டாக காரணம் என்ன?

click me!