Actor Karthi : என்ன மாமா சௌக்கியமா! ரசிகரின் இல்ல காதணி விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி

By Ganesh A  |  First Published Jun 16, 2024, 3:00 PM IST

மதுரையில் தனது ரசிகர் மன்ற தலைவரின் இல்ல காதணி விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்திக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மதுரை மாவட்ட கார்த்திக் ரசிகர் மன்ற தலைவரின் இல்ல காதணி விழா மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் கார்த்திக் ரசிகர்கள் புடை சூழ மண்டபத்திற்கு வருகை தந்தார். தாரை தப்பட்டைகள் முழங்க வண்ண மலர்கள் தூவ ரசிகர்கள் கூட்டத்தினுடைய விழா மேடைக்கு வந்த கார்த்திக்கு ஒவ்வொருவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகமாக செல்பி எடுத்த நிலையில்

காதணி விழா குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் ரசிகர்களை பார்த்து என்ன மாமா சௌக்கியமா என்று கேட்ட நிலையில் நடிகர் கார்த்திக்கை பார்த்த உற்சாகத்தில் மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாகமாக குரல் எழுப்ப ரசிகர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் தொடர்ந்து அங்கிருந்து விடை பெற்றார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்காங்க! பணக்கார வீட்டு பெண்ணை கரம்பிடித்த டாப் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் மெய்யழகன் படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் கார்த்தி உடன் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதுதவிர கார்த்தி கைவசம் உள்ள மற்றொரு படமான வா வாத்தியார் திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Atlee : பேராசையால் பறிபோன பிரம்மாண்ட வாய்ப்பு... அட்லீ - அல்லு அர்ஜுன் படம் டிராப்? காரணம் என்ன?

click me!