MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்காங்க! பணக்கார வீட்டு பெண்ணை கரம்பிடித்த டாப் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்காங்க! பணக்கார வீட்டு பெண்ணை கரம்பிடித்த டாப் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

விஜய், சூர்யா, துல்கர் சல்மான், அல்லு அர்ஜுன் என பணக்கார வீட்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட டாப் தென்னிந்திய நடிகர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 16 2024, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Thalapathy Vijay

Thalapathy Vijay

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கையை சேர்ந்தவர். அவரது பெற்றோர் இலங்கையில் மிகப்பெரிய தொழிலதிபர், தற்போது சங்கீதாவின் தந்தை லண்டனிலும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பல கோடி சொத்துக்களும் இருக்கின்றன.

27
Suriya

Suriya

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜோதிகாவும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தந்தை இந்தியில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக வலம் வந்தவர். அவருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் மும்பையில் குவிந்து கிடக்கிறதாம்.

37
Ram Charan

Ram Charan

நடிகர் ராம்சரண், உபாசனாவை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் பெண் குழந்தை பிறந்தது. உபாசனாவின் தாத்தா பிரதாப் ரெட்டி தான் அப்பல்லோ மருத்துவமனையில் தலைவர். தற்போது உபாசனாவும் அதை கவனித்து வருகிறார். இவருக்கும் 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன.

47
Allu Arjun

Allu Arjun

தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இவர் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சினேகா ரெட்டியின் தந்தை பெயர் சந்திரசேகர் ரெட்டி. இவர் தெலுங்கானாவில் முன்னணி அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Sharanya : என்னையே தந்துவிட்டேன் கந்தனிடம்... திடீரென மொட்டையடித்த காதல் பட நடிகை - எல்லாம் அவருக்காக தானாம்!

57
Jr NTR

Jr NTR

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தவர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது தேவரா என்கிற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இவர் லட்சுமி பிரணதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரணதியின் தந்தை ஒரு மீடியா சேனலின் தலைவராக உள்ளார். இதுதவிர பல தொழில்களையும் செய்து வருகிறாராம்.

67
Rana Daggubati

Rana Daggubati

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் ராணா டகுபதி. இவருக்கு மிஹீகா பஜாஜ் என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. இதில் மிஹீமாவின் தந்தை நகை வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மிஹீகாவும் இண்டீரியர் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

77
dulquer salmaan

dulquer salmaan

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மம்முட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவர் அமல் சுபியா என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து கரம்பிடித்தார். துல்கர் சல்மானை போல் அமல் சுபியாவும் பணக்கார வீட்டை சேர்ந்தவர் தான். இவரது தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Rajinikanth : அர்ஜுன் மகள் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்? தீயாய் பரவும் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
ஜூனியர் என்டிஆர்
சூர்யா
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved