நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமையா மகன் உமாபதியின் திருமண வரவேற்பில் நடிகர் ரஜினிகாந்த அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது அர்ஜுன் உடன் சென்றிருந்த போது ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியது. இவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டினர்.
இதையடுத்து கடந்த ஆண்டு சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஐஸ்வர்யா - உமாபதி ஜோடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பின்னர் இவர்களது திருமண வேலைகள் பிசியாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 11 ந் தேதி ஐஸ்வர்யா - உமாபதி ஜோடிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா - உமாபதி திருமண வரவேற்பில் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை!
இதையடுத்து ஐஸ்வர்யா - உமாபதி ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், சசிகுமார், பிரசன்னா, கூல் சுரேஷ் நடிகை சினேகா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஜயபாஸ்கர், ஜிகே வாசன், அண்ணாமலை, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் என எக்கச்சக்கமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் , pic.twitter.com/C6ANRPqZ4V
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையேறிய ரஜினி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும் கொடுக்க நீட்டினார். ஆனால் அதை அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தார் கண்டுகொள்ளவே இல்லை. யாரும் வாங்காததால் ரஜினியே அதை மணமக்களின் பின்னால் வைத்துவிட்டார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலான நிலையில், அர்ஜுன் மற்றும் தம்பிராமையா குடும்பத்தார் ரஜினி கொடுத்த பரிசை வாங்காமல் அவரை அவமானப்படுத்திவிட்டதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலரோ இது கவனக் குறைவால் நடந்திருக்கிறது. இதை ரஜினியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சப்போர்ட் செய்து விவாதித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Arjun : "சார் இல்ல மாமனார்".. மகளை கலாய்த்த ஆக்ஷன் கிங் - செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா உமாபதி - Video!