
கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "லியோ" திரைப்படம் உலக அளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் தளபதியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் தனது 68வது பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும், சென்னையை ஒட்டிய பல பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்திற்கான படபிடிப்பு பணிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர், நடிகைகள் பிரபுதேவா, பிரசாந்த், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நிலையில், சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவரும் அவருக்கு ஜோடிகளாக நடித்து வருகின்றனர்.
ஏறத்தாழ 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது 69வது பட பணிகளை முடித்த பிறகு தளபதி விஜய் முழு நேர அரசியல் ஈடுபட உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு துவக்கத்தில் தனது "தமிழக வெற்றிக்கழகம்" கட்சி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் அரசியல் களம்காண உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாட உள்ள தளபதி விஜய் அவர்களுக்கு, இப்போதிலிருந்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகும் என்பது குறித்து உறுதியான தகவலை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.