Train : மிஷ்கினை சைக்கோனு நினைச்சேன்.. ஆனா.. Costly கிப்ட் கொடுத்தார் - எதற்காக? மனம் திறந்த மக்கள் செல்வன்!

Ansgar R |  
Published : Jun 15, 2024, 04:31 PM IST
Train : மிஷ்கினை சைக்கோனு நினைச்சேன்.. ஆனா.. Costly கிப்ட் கொடுத்தார் - எதற்காக? மனம் திறந்த மக்கள் செல்வன்!

சுருக்கம்

Vijay Sethupathi : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான "மகாராஜா" திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தனது 50வது திரைப்படத்தை மிக நேர்த்தியான ஒரு படமாக அமைத்திருக்கிறார் மக்கள் செல்வன்.

"குரங்கு பொம்மை" என்கின்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் தான் நிதிலன் சுவாமிநாதன். அவருடைய இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி உள்ள மக்கள் செல்வனின் "மகாராஜா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது. துவக்கம் முதல் இறுதி வரை படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்திருக்கிறார் நிதிலன் என்றால் அது மிகையல்ல. 

இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தான் மக்களின் செல்வன் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்த மகாராஜா திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது கொடுத்த ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் மிஷ்கின் குறித்து அவர் பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்.. அஞ்சாமை படக்குழு மீது புகார்.. என்ன ஆச்சு?

"பல ஆண்டுகளாக இயக்குனர் மிஷ்கினை நான் ஒரு சைக்கோ என்று தான் நினைத்திருந்தேன். ஆகையால் அவர் எடுத்த "சைக்கோ" திரைப்படத்தை கூட நான் வெகு நாட்கள் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒரு நாள் அந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததும் அசந்து விட்டேன், உடனடியாக அவரை நேரில் சந்தித்து அந்த படத்தை குறித்து பேச விரும்பினேன்". 

"பலருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு அது, ஒரு நடிகனாக நான் இருப்பதனால் ஒரு படத்தை பற்றி அந்த படத்தை இயக்கிய இயக்குனருடன் என்னால் உரையாட முடிகிறது. சைக்கோ திரைப்படம் குறித்து சுமார் 8 மணி நேரம் நானும் அவரும் உரையாடினோம். உங்களை சைக்கோ என்று தான் முதலில் நினைத்தேன், என்பதை கூட நேரடியாக அவரிடம் கூறினேன்".

"நான் அவரிடம் பேசி முடித்ததும் தனது கையில் கட்டி இருந்த ரேடோ கடிகாரத்தை சட்டென்று எடுத்து எனக்கு பரிசாக கொடுத்தார். மிஷ்கினை சைக்கோ என்று நினைத்ததற்கு, எனக்கு அன்று ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஒன்று கிடைத்தது", என்று கூறி அவருடனான தனது உரையாடல் குறித்து பேசியுள்ளார் விஜய் சேதுபத்தி. 

விஜய் சேதுபதி தற்பொழுது TRAIN என்கின்ற திரைப்படத்தில் முதல் முறையாக மிஷ்கினின் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நானும் ரௌடி தான் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இதுதான் காரணம்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்