- Home
- Gallery
- நானும் ரௌடி தான் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இதுதான் காரணம்..
நானும் ரௌடி தான் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இதுதான் காரணம்..
நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்து பேசி உள்ளார்.

Maharaja Movie
விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படம் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்து பேசி உள்ளார்.
Vijay Sethupathi
ஒரு நடிகராக தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் பல திரைப்படத் இயக்குனர்கள் தன்னை எவ்வாறு வடிவமைத்தனர் என்பதைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி தனக்கு இயக்குனர்களுடன் ஏற்பட்ட சண்டைகளை நினைவு கூர்ந்தார்.
Vijay Sethupathi About Vignesh Shivan
இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் முதலில் நன்றாகப் பழகவில்லை என்று விஜய் சேதுபதி கூறினார். இதுகுறித்து பேசிய அவர் “நானும் ரவுடி தான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு பிறகு நான் விக்கியை (விக்னேஷ் சிவன்) அழைத்து சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினேன்.
Vijay Sethupathi About Vignesh Shivan
நான்கு நாட்களுக்குப் பிறகு, நயன்தாரா என்னிடம் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று கேட்டார். பாண்டி கேரக்டரில் மிகவும் கூலாக நடிக்கும்படி அவர் என்னிடம் கேட்கிறார் என்று அவரிடம் கூறினேன்.
Vijay Sethupathi About Vignesh Shivan
மேலும் பேசிய விஜய் சேதுபதி , “விக்கி ஸ்கிரிப்டை விவரித்தபோது, அது அருமையாக இருந்தது. ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நேரம் பிடித்தது. அந்த கேரக்டரில் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால் தான் சரியாகச் சொன்னார் என்று நினைக்கிறேன். பாண்டி கேரக்டர் அழுதால் எல்லோரும் சிரிக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பையன், ஆனால் ஒரு ஃபிராடு. முதல் நான்கு நாட்களுக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு புரியவில்லை, அந்த நேரத்தில் நான் மிகவும் பாதுகாப்பற்றவனாக இருந்தேன்.” என்று தெரிவித்தார்.
Vignesh Shivan and Vijay Sethupathi
விக்னேஷ் சிவன் ஒரு ஸ்பெஷலான இயக்குனர் என்றும், அவர் ஒரு நியூ ஜென் இயக்குனர் என்றும் விஜய் சேதுபதி கூறினார். “காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரி ஒரு விஷயத்தை நாங்க தொடவே மாட்டோம். அவரை யாரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அவரை நம்பி உடன் சென்றால், அவர் உள்ளே நிறைய மேஜிக்கை உருவாக்குவார். அதுபோல, பல அனுபவங்கள் என்னை இன்றைய நிலையில் ஆக்கியுள்ளன.” என்று தெரிவித்தார்.