- Home
- Gallery
- "மகாராஜா" படத்தில் நான் தான் நடிப்பேன்.. அடம்பிடித்த ஹிட் நடிகர் - பின் விஜய் சேதுபதி கமிட்டாக காரணம் என்ன?
"மகாராஜா" படத்தில் நான் தான் நடிப்பேன்.. அடம்பிடித்த ஹிட் நடிகர் - பின் விஜய் சேதுபதி கமிட்டாக காரணம் என்ன?
Maharaja Movie : நிதிலன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படம் மெகாஹிட் படமாக மாறியுள்ளது.

maharaja
ஆரம்ப காலத்தில், தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நேற்று நடித்து, பின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் "பீட்சா" திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அங்கீகாரம் பெற்றவர் தான் விஜய் சேதுபதி. இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் அவரும் ஒருவர். தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் ஈர்க்கிறார் இந்த மக்கள் செல்வன்.
Actor Karthi : என்ன மாமா சௌக்கியமா! ரசிகரின் இல்ல காதணி விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி
Nithilan
ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் பிரபல இயக்குனர் நிதிலன். "குரங்கு பொம்மை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கினார். சில தினங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா படம், மெகா ஹிட் படமாக மாறியுள்ளது.
dhananjayan
இந்த சூழலில் மகாராஜா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்பது குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பிரபல ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் தனஞ்செயன் கூறியிருக்கிறார். "நிதிலன் Passion Studios நிறுவனத்துடன் அந்த படத்தை அறிவிக்கவிருந்த நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் அந்த படத்தை எடுக்க ஆர்வம் காட்டிது என்றார் அவர்.
vijay antony
உடனே நாங்கள் இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் கூற அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது, நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று கூறினார். ஆனால் முதலில் Passion Studios நிறுவனம் இந்த கதையை லாக் செய்துவிட்டதால் அந்த படம் அவர்களிடம் சென்றது, மேலும் மக்கள் செல்வன் இந்த படத்தில் இணைந்தார் என்று கூறியுள்ளார் தனஞ்செயன்.