Latest Videos

KPY Bala: இக்கட்டான நிலையில் வெங்கல் ராவ்... சிம்புவுக்குப் பிறகு கேபிஒய் பாலா செய்த பெரிய உதவி!!

By SG BalanFirst Published Jun 26, 2024, 11:14 PM IST
Highlights

வெங்கல் ராவ் அண்ணா திரும்ப வந்து மீண்டும் நம் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று பாலா விருப்பம் தெரிவித்துள்ளார். பாலா மனிதாபிமானத்துடன் செய்திருக்கும் பெரிய உதவியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நலிவடைந்த கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கே வழி இல்லாமல் கையேந்தி நிற்கும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சில அமைப்புகள் நிதி உதவி செய்து காப்பாற்றி வருகின்றன. அவ்வப்போது அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகும்போது பிரபல நட்சத்திரங்களும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் தமிழில் 30 வருடங்களுக்கு மேலாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கை, கால்கள் செயலிழந்துவிட்டதாகவும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் கூறி ஷாக் கொடுத்திருக்கிறார். இதனால், அடுத்து வேளை சாப்பாட்டுக்கே வழி தெரியாமல் உள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

VJ Anjana dance: அந்த க்யூட் ஏஞ்சலா இப்படி; சட்டையைக் கழற்றி வேற லெவல் சேஞ்ஜ் காட்டும் அஞ்சனா!!

இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு நடிகர் சிலம்பரசன் ரூ.2 லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இந்நிலையில், இளம் காமெடி நடிகர் கே.பி.ஒய் பாலா வெங்கல் ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கேபிஒய் பாலா, வெங்கல் ராவ் அண்ணாவுக்கு என்னால் முடிந்த தொகையை மருத்துவச் செலவுக்காகக் கொடுத்திருப்பதாகவும் அனைவரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வெங்கல் ராவ் அண்ணா திரும்ப வந்து மீண்டும் நம் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்றும் பாலா விருப்பம் தெரிவித்துள்ளார். பாலா மனிதாபிமானத்துடன் செய்திருக்கும் பெரிய உதவியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த வெங்கல் ராவ்... ஒரு ரூபா கூட கொடுக்காத வடிவேலு; ஓடோடி வந்து உதவிய சிம்பு

click me!