குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி மீலாது நபி விழாவை கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

By Ganesh A  |  First Published Sep 29, 2023, 10:10 AM IST

கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட மீலாது நபி விழா, குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.


இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மீலாது நபிவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மீலாது ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல் படி, நடைபெற்ற இதில், தெற்கு மாவட்டம் இளைஞரணி தலைவர் பாபு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் முன்னின்று நடத்துவதால் மக்களிடையே பெரும் வரவற்பை பெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிலாது நபியை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... “பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி... கொடல் உருவுற சம்பவம் உறுதி” லியோ பாடலில் தாக்கப்பட்டாரா ரஜினி!

click me!