பெங்களூருவில் தனது சித்தா படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக சென்ற நடிகர் சித்தார்த் அவர்களை, அந்த நிகழ்ச்சியில் பேசவிடாமல், சில கன்னட அமைப்பினர், அவரை அரங்கை விட்டு வெளியேற சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி பல இடங்களில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ஒரு திரைப்படம் தான் சித்தா. ஒரு சிறுமிக்கும் அவருடைய சித்தப்பாவிற்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை கூறும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.
Here's our wishing the makers of the film for delivering a sensible film with a strong message. also heaped praise on for bankrolling this quality film. pic.twitter.com/1ISp908spO
— KP ™ (@kamalmaniac)இந்த படத்தை பார்த்த நடிகர் கமல் அவர்களும் இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குனரையும், நடிகர் சித்தார்த் அவர்களையும் அவர் வெகுவாக பாராட்டினார். படத்தின் தயாரிப்பாளர், ஒரு படத்தை ஆதரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையியல் கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், இப்படத்தின் நாயகன் நடிகர் சித்தார்த் அவர்கள். இந்த சூழலில் தான கன்னட மொழியில் வெளியாகவிருக்கும் சித்தா திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்ள அவர் பெங்களூரு சென்றிருந்தார்.
இந்நிலையில் காவிரி பிரச்சனை காரணமாக, மேடையில் நடிகர் சித்தார்த் பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே உள்ளே நுழைந்த சில கன்னட அமைப்பினர், தமிழ் படத்திற்கு இங்கு நடத்தப்படும் பிரமோஷன் பணிகள் நடக்க கூடாது என்றும், தயவு செய்து உடனடியாக இந்த நிகழ்வை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்கள்.
நடிகர் சித்தார்த் அவர்களும், அந்த அமைப்பினரிடம் சமரசம் பேச முயன்ற நிலையில், அந்த கன்னட அமைப்பினர் உடனடியாக நடிகர் சித்தார்த் அங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று கூறியதை அடுத்து, சித்தார்த் அங்கிருந்து புறப்பட்டார். இந்த நிகழ்விற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0
— Prakash Raj (@prakashraaj)அதில் "பல தசாப்தங்கள் பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானியர்களையும், கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக .. கன்னடர்கள் சார்பாக.. மன்னிக்கவும் சித்தார்த்" என்று எழுதியுள்ளார்.